காவிரி வாரியம் அமைக்க மத்தியஅரசு தாமதம்! உணர்வை தெரிவிக்க அதிமுக உண்ணாவிரதம்!

மதுரை: காவிரி விவகாரத்தில் தமிழர்களின் உணர்வினை பிரதிபலிக்கும் வகையில் அதிமுக சார்பில் ஏப்ரல் 2-ம் தேதி உண்ணாவிரதப் போராட்டம் நடைபெறவுள்ளது.

முதல்வர் பழனிசாமி இதுகுறித்து மதுரையில் அளித்த பேட்டி: உச்ச நீதிமன்ற தீர்ப்பின்படி காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க நாடாளுமன்றத்தில் அதிமுக உறுப்பினர்கள் மத்திய அரசுக்கு அழுத்தம் தந்தனர்.அவை தொடங்கியதிலிருந்தே 17 நாட்கள் இந்த கோரிக்கையை வலியுறுத்தி அதிமுக உறுப்பினர்கள் அவையை முடக்கினர்.காவிரி மேலாண்மை வாரியத்தை மத்திய அரசு அமைக்காததால், தமிழர்களின் உணர்வினை பிரதிபலிக்கும் வகையில் ஏப்ரல் 2-ம் தேதி தமிழகம் முழுவதும் அதிமுக சார்பில் உண்ணாவிரதப் போராட்டம் நடைபெறும்.மத்திய அரசுக்கு எதிராக நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர்வது குறித்து சட்ட வல்லுநர்களுடன் ஆலோசனை நடத்தி வருகிறோம் என்றார்.                                இதேகருத்தை மதுரையில் நடைபெற்ற திருமண விழாவில் துணைமுதல்வர் பன்னீர்செல்வமும் தெரிவித்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here