காவிரி வாரியம் தாமதம்! எம்.பி.க்கு எலிமருந்து!!

கோவை: காவிரி வாரியம் அமைக்கப்படாததை கண்டித்து அதிமுக எம்பிக்கு எலிமருந்தை அனுப்பிவைத்துள்ளார்.
கிணத்துக்கடவை சேர்ந்தவர் பெரியார்மணி. விவசாயம் செய்துவருகிறார்.காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கப்படாததால் கோபமடைந்த கிணத்துக்கடவைச் சேர்ந்த
பெரியார்மணி என்பவர் பொள்ளாச்சி எம்.பி. மகேந்திரனின் டெல்லி முகவரிக்கு எலி மருந்தை கொரியர் மூலமாக அனுப்பி வைத்துள்ளார்.
இதன்மூலம் தனது எதிர்ப்பை அவர் தெரிவித்துள்ளார். 37எம்பிக்கள் இருந்தும் வாரியம் அமைக்க முடியவில்லை. ஒரு உறுப்பினர் தற்கொலை செய்துகொள்வேன் என்று அவையில் மிரட்டுகிறார்.
அத்தகைய செயலை செய்தாவது காவிரி வாரியத்தை கொண்டுவாருங்கள்.
அதற்கு உதவும் வகையில் எலிமருந்தை அனுப்புகிறேன். என்று பெரியார்மணி தனது கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here