விராட் கோலிக்கும் மெழுகுச்சிலை!மேடம் துசாட்ஸ் மியூசியம் கவுரம்!!

டெல்லி: டெல்லியில் உள்ள மேடம் துசாட்ஸ் அருங்காட்சியகத்தில் பல்வேறு துறைகளைச்சார்ந்த
சாதனையாளா்களின் மெழுகு சிலைகள் வைக்கப்படுகின்றன.
இந்திய கிரிக்கெட் அணியின் முன்னனி நட்சத்திர வீரரான விராட் கோலிக்கும் இங்கு மெழுகுச் சிலை வைக்கப்பட உள்ளது.விராட் கோலி தலைமையிலான இந்திய அணி தொடர்ந்து பல வெற்றிகளைப் பெற்றுவருகிறது. ஐபிஎல் தொடரில் 2013ஆம் ஆண்டு முதல் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியின் கேப்டனாக விளையாடிவருகிறார்.
இவரின் வெற்றியை கௌரவிக்கும் வகையில் மெழுகு சிலை அமைப்பதாக கூறியுள்ளது.
இது குறித்து பேசிய விராட் கோலி, ”மேடம் துசாட்ஸ் அருங்காட்சியகத்தில் மெழுகுச் சிலை வைக்க உள்ளது எனக்கு கிடைக்கும் மிகப் பெரிய கௌரவம் என்றார்.

மேடம் துசாட்ஸ் அருங்காட்சியகத்தில் கிரிக்கெட் வீரர் சச்சின், கபில் தேவ், கால்பந்து வீரர் ரொனால்டோ ஆகியோரின் மெழுகுச் சிலைகள் ஏற்கனவே வைக்கப்பட்டுள்ளன.சமீபத்தில் பாகுபலி படத்தில் கட்டப்பா என்ற கதாபாத்திரத்தில் நடித்த சத்யராஜுக்கு மெழுகுச் சிலை அமைக்கவுள்ளதாக மேடம் துசாட்ஸ் அருங்காட்சியகம் அறிவித்தது. மெழுகுச் சிலை அமைக்கப்படும் முதல் தமிழ் நடிகர் என்ற பெருமையையும் அதன் மூலம் சத்யராஜ் பெற்றார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here