மன்னித்து விடுங்கள்! ஸ்டீவ் ஸ்மித் கண்ணீர் பேட்டி!!

மெல்போர்ன்:வீரனாக தென்னாப்பிரிக்கா சென்று கூனிக்குறுகி தாய்மண்ணுக்கு திரும்பியுள்ளார் கிரிக்கெட் வீரர் ஸ்டீவ் ஸ்மித்.
கிரிக்கெட் பந்தை சிதைத்த விவகாரத்தில் ஓராண்டு கிரிக்கெட் விளையாட ஆஸி. வீரர் ஸ்டீவ் ஸ்மித்துடன் அவர் 2சகாக்களுக்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது.
தனதுதவறுக்காக கதறியழுது மன்னிப்பு கோரினார் ஸ்டீவ் ஸ்மித்.கேப்டவுனில் நடந்த தவறுக்கு நான் முழு பொறுப்பேற்கிறேன்.
தலைமைத்துவத்தின் தோல்வி, என் தலைமையின் தோல்வி. இதனால் ஏற்பட்ட சேதத்துக்கு என்னால் முடிந்த வகையில் ஈடு கட்டுவேன்.

இதனால் ஏதாவது நன்மை உண்டென்றால் அது அடுத்தவர்களுக்கு இதன் மூலம் கிடைக்கும் பாடம்தான். மாற்றத்துக்கான காரணியாக நான் விளங்க முடியும் என்று நம்புகிறேன்.நல்லவர்கள் தவறு செய்வார்கள், நடந்ததை அனுமதித்ததன் மூலம் நான் மிகப்பெரிய தவறிழைத்து விட்டேன். என் முடிவில் மிகப்பெரிய பிழையைச் செய்து விட்டேன் என்னை மன்னித்து விடுங்கள்.எனக்குத் தெரிந்தவரை இப்படி முன்பு நடந்ததில்லை. முதல் முறையாக நடந்து விட்டது, இனி இப்படி நடக்காது என்று நான் உங்களுக்கு உறுதியளிக்கிறேன்.ஆஸ்திரேலியா, கிரிக்கெட் ரசிகர்கள் மற்றும் மக்களுக்கு நான் கவலையையும், வலியையும் கொடுத்துவிட்டதற்கு வருந்துகிறேன். மீண்டும் மன்னிப்புக் கேட்டுக் கொள்கிறேன். காலத்தில் இழந்த மதிப்பை மீட்டெடுப்பேன் என்ற நம்பிக்கை இருக்கிறது, காலப்போக்கில் மக்கள் என்னை மன்னிப்பார்கள் என்று நினைக்கிறேன். இவ்வாறு ஸ்டீவ் ஸ்மித் பேட்டியளித்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here