சவுதி அரேபியாவில் ஒரு ஷாருக்கான்!

சவுதிஅரேபியா: அரேபியா டிவிக்களில் வரவேற்பு பெற்றுவருகிறார் இந்தி நடிகர் ஷாருக்கானின் தோற்றம் உடைய ஒருவர்.
ஜோர்டான் நாட்டை சேர்ந்தவர். புகைப்படக்கலைஞரான இவர் பெயர் அக்ரம் அல் இசாவி.சமூக ஊடகங்கள் வாயிலாக இவர் பற்றிய செய்தி வெளியுலகுக்கு தெரியவந்தது.
இருப்பினும், ஷாருக்கானை போன்று இருக்கிறேன் என்று மக்கள் பலரும் தன்னைப்பற்றிக்கூறுவது வருத்தம் அளிக்கிறது என்று சமீபத்திய டிவி பேட்டி ஒன்றில் கூறியுள்ளார் இசாவி.என்னைப்போல்தான் ஷாருக்கான் உள்ளார் என்று அவர் வேடிக்கையாக கூறினார்.
சாதாரண ஸ்டாராக உள்ள தனக்கே இவ்வளவு வரவேற்பு இருக்கிறதென்றால், சூப்பர் ஸ்டாரானால் எவ்வளவு வரவேற்பு இருக்கும் என்பதை நினைத்துப்பார்க்கவே பிரமிப்பாக இருக்கிறது என்று தெரிவித்துள்ளார் அக்ரம் அல் இசாவி.

தனக்கு நடிக்க வாய்ப்புகள் வந்துகொண்டிருப்பதாகவும், டிவி, தொடர்களை புறக்கணித்து சினிமாவில்தான் கவனம் செலுத்தவுள்ளேன் என்றும் அவர் பேட்டியில் தெரிவித்தார்.
அமீரகத்தில் தயாராகி வரும் ஒரு சினிமாவில் நடிக்க ஒப்பந்தம் ஆகியுள்ளேன்.
டிவி நிகழ்ச்சிகளிலும் தோன்றுகிறேன். ஷாருக்கானுடன் சேர்ந்து ஒரு நிகழ்ச்சி நடத்தவேண்டும் என்று ஆர்வம் உள்ளது என்று இசாவி பேட்டியளித்துள்ளார்.
அல் அராபியா டிவிசானல் முதன்முறையாக இவரை பேட்டியெடுத்து ஒளிபரப்பியது.அதனைத்தொடர்ந்து அரபுநாடுகளில் உள்ள பல சானல்களும் இவரை பேட்டியெடுக்க, நிகழ்ச்சிகளில் பங்கேற்கவைக்க ஆர்வம் காட்டுகின்றன.
நிகழ்ச்சியை பார்த்த ஷாருக்கானின் ரசிகர்கள் பலரும் இசாவிக்கு பாராட்டு தெரிவித்து வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here