ஐசிஐசிஐ வங்கிக்கு ரூ.59கோடி அபராதம்!

மும்பை:பிரபல தனியார் வங்கியான ஐசிஐசிஐ வங்கிக்கு இந்திய ரிசர்வ் வங்கி ரூ.59கோடி அபராதம் விதித்துள்ளது. அனைத்து வங்கிகளும் தங்களுக்கு நிதி முதலீடு திரட்டும் பொருட்டு பல்வேறு வகையான திட்டங்களின் கீழ் பத்திரங்களை வெளியிடும்.
இத்தகைய பத்திரங்களை வெளியிடுவது, பராமரிப்பது, மீண்டும் பணமாக்குவது குறித்து ரிசர்வ் வங்கி விதிமுறைகள் வகுத்துள்ளது.
ஐசிஐசிஐ வங்கி தங்கள் கைவசம் உள்ள நிதிப்பத்திரங்கள் தொடர்பாக சரியான தகவல்களை தெரிவிக்கவில்லை.

இதனால் தகவலை மறைத்த ஐசிஐசிஐ வங்கிக்கு ரிசர்வ் வங்கி ரூ.59 கோடி அபராதம் விதித்து உத்தரவிட்டுள்ளது.
இது ஒரு சாதாரண தவறுதான் என்றும், வேண்டுமென்றே பத்திர விபரங்களை மறைக்கவில்லை என்று வங்கித்தரப்பில் இருந்து விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here