குறைந்த விலையில் ஆப்பிள் ஐ-பேட்!

சிகாகோ: ஆப்பிள் நிறுவனம் புதிய ஐபேடை குறைந்த விலைக்கு அறிமுகம் செய்துள்ளது.
பல்வேறு சிறப்பம்சங்களைக் கொண்டுள்ள இந்த புதிய ஐபேடின் விலை ரூ.21,500 ஆகும்9.7 இன்ச் திரையளவு கொண்டுள்ள இந்த மாடல், A10 ப்ராசசரில் இயங்குகிறது.
32GB இன்டர்னல் மெமரி வசதியும், 10 மணி நேரத்துக்கு செயல்படும் அளவுக்கு நீடித்த பேட்டரியும் இந்த ஐபாடில் உள்ளது.சிகாகோவில் இதை அறிமுகம் செய்த ஆப்பிள் நிறுவனம் அடுத்த மாதம் உலகம் முழுவதும் இதன் விற்பனையை தொடங்குமென தெரிவித்துள்ளது.
ஆப்பிள் பென்சில் என்ற ஒன்றையும் விற்பனைக்கு கொண்டுவர அந்நிறுவனம் திட்டமிட்டுள்ளது. இதனுடன் பயனர்கள் பயன்படுத்த 200ஜிபி அளவுக்கு க்ளவுட் ஸ்டோரேஜ் வழங்கவும் ஆப்பிள் திட்டமிட்டுள்ளது.ஐபேட் விலை அதிகம் என்பதால் அதன்விற்பனை சூடுபிடிக்கவில்லை.
எனவே க்ளவுட் தொழில்நுட்பத்துடன் கூடிய ஐபேட்களை குறைந்தவிலைக்கு தயாரிக்க தொடங்கியுள்ளது ஆப்பிள்.
இவற்றை பள்ளி, கல்லூரி மாணவர்களிடம் அதிகளவில் விற்க திட்டமிடுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here