இந்திய செயற்கைக்கோள் ஜிசாட்6ஏ! வெற்றிகரமாக விண்ணில் பயணம்!

ஸ்ரீஹரிகோட்டா: இந்தியாவின் தகவல் தொடர்பு செயற்கைக்கோள் ஜிசாட்6ஏ, வெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்டது.ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டா சதீஸ்தவான் விண்வெளி ஆய்வு மையத்தில் உள்ள 2வது ஏவுதளத்தில் இதற்கான கவுண்ட் டவுன் நேற்று மதியம் 1.56 மணிக்கு தொடங்கியது.
ஜிஎஸ்எல்வி- எப்8 ராக்கெட் மூலம் இன்று மாலை 4.56 மணிக்கு விண்ணில் ஏவப்பட்டது.
4டன் எடையுள்ள இச்செயற்கைக்கோள் பூமியில் இருந்து 170கி.மீ. தூரத்தில் நிர்ணயிக்கப்பட்ட பாதையில் வெற்றிகரமாக சுற்றிவர தொடங்கியுள்ளது.தகவல்தொடர்பு சேவைக்கு இந்த செயற்கைக்கோள் முன்னுரிமை அளித்து அதனை மேம்படுத்த பயன்படுத்தப்படும். மேலும் பருவமாற்ற தகவல்களையும் துல்லியமாக பெற முடியும்.  10 ஆண்டுகள் இச்செயற்கைக்கோளின் ஆயுள் ஆகும். தகவல் தொடர்பு வசதிக்காக 24 சி பேண்ட் டிரான்ஸ்பாண்டர்கள் மற்றும் தகவல்தொடர்பு வசதிக்காக 6 மீட்டர் விட்டமுடைய ஆண்டனாவும் பொருத்தப்பட்டுள்ளன.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here