விமானத்தின் டயர் திடீரென வெடித்தது!

ஹைதராபாத்: தனியார் விமானத்தின் டயர்வெடித்ததால் திடீர் பரபரப்பு ஏற்பட்டது.
இண்டிகோ 6இ 7117 ரக விமானம் திருப்பதியில் புறப்பட்டது. அந்த விமானம் ஹைதராபாத்தில் உள்ள ராஜீவ் காந்தி சர்வதேச விமான நிலையத்தில் நேற்று இரவு 10.25 மணியளவில் தரையிறங்கியது. அப்போது அதன் டயர் திடீரென வெடித்தது.உடனடியாக விமான நிலையத்தில் உள்ள தீயணைப்புப் படைக்கு தகவல் அளிக்கப்பட்டது.
இந்த விமானத்தில் இருந்த பயணிகள் அனைவரும் பத்திரமாக மீட்கப்பட்டனர்.
இந்த விபத்தின் காரணமாக ஹைதராபாத் விமான நிலையத்தின் ஓடுதளம் சிறிது நேரம் மூடப்பட்டது.விமானத்தில் பயணம் செய்த ஒரு குழந்தை, 4 ஊழியர்கள் உட்பட 77 பேரும் பத்திரமாக உள்ளனர்” என இண்டிகோ நிறுவனம் தெரிவித்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here