சமந்தா மீதான வதந்தி! முற்றுப்புள்ளி வைத்தார் அமைச்சர்!!

ஹைதராபாத்: நடிகை சமந்தா சமூக சேவையிலும் ஈடுபட்டு வருகிறார் இதற்காக அவர் யாரிடமும் நன்கொடை பெறுவதில்லை.
தெலுங்கானா மாநிலத்தின் கைத்தறி ஆடைகளின் விளம்பர தூதராக இருந்து வருகிறார் நடிகை சமந்தா. கிராமம் முதல் நகரங்கள் வரை சென்று கைத்தறி ஆடை குறித்த விழிப்புணர்ச்சியை மக்களிடம் ஏற்படுத்தி வருகிறார்.
இந்த செயலுக்காக அவர் எந்தவித சன்மானமும், பிரதிபலனையும் தெலுங்கானா அரசிடம் இருந்து பெறவில்லை.ஆனால் தெலுங்கானா அரசிடம் இருந்து ஒரு பெரிய தொகையை சமந்தா வாங்கிக் கொண்டதாக சமூக வலைத்தளங்களில் வதந்தி பரவியது. இதுகுறித்து தெலுங்கானா அமைச்சர் கே.டி.ஆர் கூறுகையில், ‘கைத்தறி ஆடை விளம்பர தூதர் பணிக்காக நடிகை சமந்தா ஒரு பைசாகூட சன்மானமாக பெறவில்லை. இதை ஒரு சமூக சேவையாக இலவசமாக செய்து வருகிறார். அவரின் பெரிய மனசு யாருக்கு வரும்’’ என்று கூறியுள்ளார். இதனால் சமந்தா மீதான வதந்திகளுக்கு அமைச்சர் முற்றுப்புள்ளி வைத்துள்ளார்.

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here