கொரியர் கொண்டுவர தாமதம்! வாலிபருக்கு சரமாரியாக வெட்டு!!

டெல்லி:செல்போன் பார்சலை தாமதாக எடுத்துவந்த கொரியர் டெலிவரி வாலிபரை பெண் ஒருவர் கொடூரமாக குத்தி காயப்படுத்தியுள்ளார்.டெல்லி நிகால்விஹார் பகுதியை சேர்ந்தவர் கமல்தீப்(30).
இணைய நிறுவனத்தில் செல்போன் வாங்க பதிவுசெய்தார்.
இணைய நிறுவனம் அவரது செல்போன் கொரியரில் வருவதாக தகவல் அனுப்பியது.
கொரியர் நிறுவனத்தை சேர்ந்த கேசவ்(21) என்ற வாலிபர் கமல்தீப் வீட்டை தேடிக்கண்டுபிடித்து கொடுக்க இரவாகி விட்டது.இதனால் கடும்கோபமடைந்த கமல்தீப், கேசவை கத்தியால் சரமாரியாக காயப்படுத்தினார்.
கமல்தீப்பின் சகோதரர் ஜிதேந்திரசிங்கும் சேர்ந்து கேசவை தாக்கினார்.
இருவரும் கேசவிடம் இருந்து ரூ.40ஆயிரத்தை எடுத்துக்கொண்டு அவரை அங்கிருந்த முட்புதரில்வீசி சென்றனர்.

இதுகுறித்து போலீசார் விசாரித்து, கமல்தீப், ஜிதேந்திரசிங்கை கைதுசெய்தனர்.
3நாள் தீவிரசிகிச்சைக்குப்பின் மீண்டும் கேசவுக்கு பேச்சு வந்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here