போதையில் சீரழிந்துவரும் தலைநகர் குழந்தைகள்!

டெல்லி: தலைநகர் டெல்லியில் சாலையோரம் வசிக்கும் குழந்தைகளில் 90 சதவீதம்பேர் போதை பழக்கத்திற்கு அடிமையாகியுள்ளதாக அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது.டெல்லியில் 50, 923 குழந்தைகள் சாலையோரங்களில் வாழ்ந்து வருகின்றனர். இவர்களில் 91.14 சதவீத குழந்தைகள் போக்கு அடிமையாகி உள்ளனர்.
இவர்களின் குடும்பங்கள் சரியான வருமான இல்லாமல் கிடைத்த வேலையை செய்து வாழ்ந்து வருகின்றனர். சாலையோர குழந்தைகளில் 21,770 குழந்தைகள் புகையிலை பழக்கத்திற்கும், 9450 குழந்தைகள் மதுவுக்கும், ஹெராயின் 840 குழந்தைகள் அடிமையாகி உள்ளதாக தெரியவந்துள்ளது.
இப்புள்ளி விவரங்கள் அனைத்திந்திய மருத்துவ அறிவியல் பயிற்சிமையத்தின் ஆய்வில் தெரியவந்துள்ளது.போதையால் இறக்கும் குழந்தைகளின் எண்ணிக்கை கடந்த இரண்டு ஆண்டுகளாக அதிகரித்து வருகின்றன.
தீயபழக்கங்களுக்கு அடிமையாகி உள்ள குழந்தைகளை மீட்க புதிய திட்டம் உருவாக்கப்பட்டுள்ளது.
தொண்டுநிறுவனங்கள், உள்ளாட்சிமன்ற பிரதிநிதிகள் உதவியுடன் மீட்புத்திட்டம் நடைமுறைப்படுத்தப்படும்.

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here