எங்கும் லீக்! மத்திய அரசு வீக்!!

பெங்களூர்: எல்லாவிஷயங்களிலும் தகவல்களை கசிய விடப்படுகிறது. மத்திய அரசு பலவீனமாக உள்ளதை இது காட்டுகிறது என விமர்சித்துள்ளார் ராகுல்காந்தி.தனிப்பட்ட விவரங்களுடன் கூடிய ஆதார் அட்டை ஒவ்வொருவருக்கும் வழங்கப்பட்டுவருகிறது.
ஆதார் அட்டையில் உள்ள விவரங்கள் மற்றும் தகவல்கள் கசிவாகின்றன என குற்றச்சாட்டு எழுந்தது. இதற்கு மத்திய அரசு நீதிமன்றத்தில் மறுப்பு தெரிவித்துள்ளது.கர்நாடக தேர்தல் தேதியை தேர்தல் ஆணையம் வெளியிடுவதற்கு முன்பே பாரதீய ஜனதாவின் தகவல் தொழில்நுட்ப பிரிவு நிர்வாகி மாளவியா தனது டுவிட்டரில் வெளியிட்டுவிட்டார்.

மத்திய அரசு பணியாளர் தேர்வாணையம் தேர்வு வினாத்தாள் கசிவு, சி.பி.எஸ்.இ. அரசுத்தேர்வு வினாத்தாள் கசிவு என தொடர்ந்து பல சம்பவங்கள் நடந்து வருகின்றன.

இதுபற்றி சமூக ஊடகத்தில் ராகுல் காந்தி வெளியிட்டுள்ள செய்தியில், தகவல் கசிவு, ஆதார் கசிவு, மத்திய அரசு பணியாளர் தேர்வாணைய தேர்வு வினாத்தாள் கசிவு, தேர்தல் தேதி கசிவு மற்றும் சி.பி.எஸ்.இ. தேர்வு வினாத்தாள் கசிவு என எத்தனை கசிவுகள்.

எல்லாவற்றிலும் ஒரு கசிவு ஏற்படுகின்றது. காவலாளி பலவீன நிலையில் உள்ளார் என மத்திய சை குறிப்பிட்டு அதில் தெரிவித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here