தாயும், மகனும் 10ம்வகுப்பு தேர்வு எழுதினர்!

லுதியானா: பத்தாம் வகுப்பு அரசுத்தேர்வை தாயும், மகனும் சேர்ந்து எழுதியுள்ளனர்.
இந்த ருசிகர சம்பவம் நடந்துள்ளது பஞ்சாப் மாநிலம் லுதியானா நகரில்.
லுதியானாவை சேர்ந்த பெண் ரஜினிபாலா(44).இவர் தனது 9வகுப்பு தேர்வில் 1989ல் எழுதி பாஸ் ஆகியிருந்தார்.
குடும்பச்சூழ்நிலையால் அவரால் மேற்கொண்டு படிக்க முடியவில்லை.
இதற்கிடையே அவருக்கு திருமணம் ஆனது குழந்தை பெற்றார். அவருக்கு பிறந்த மூன்று குழந்தைகளையும் நன்றாக படிக்க வைத்துவருகிறார் ரஜினிபாலா.
இருப்பினும் தானும் ஒரு பட்டப்படிப்பாவது படிக்க வேண்டும் என்ற ஆர்வம் அவரை தொடர்ந்து வாட்டியது
எனவே, குழந்தைகளை வளர்க்கும் பொறுப்பு குறைந்துள்ள இக்காலகட்டத்தை பயன்படுத்தி மீண்டும் படிக்க ஆரம்பித்தார். 17 ஆண்டுகளுக்குப்பின் படிக்க தொடங்கிய இவர் மகனுடன் சேர்ந்து 10ம் வகுப்பு அரசுத்தேர்வை எழுதியுள்ளார்.ரஜினிபாலா அவர் வசிக்கும் பகுதியில் உள்ள சுகாதார நிலையத்தில் உதவியாளராக பணியாற்றி வருகிறார். தனது படிப்புக்கு கணவர், குழந்தைகள் உதவியாக உள்ளதாக தெரிவித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here