போலீஸ்காரருக்கு வெட்டு! மூன்று ரவுடிகள் கைது!

சென்னை: பூந்தமல்லி காவல் நிலையத்தில் தலைமை காவலராக பணிபுரிபவர் அன்பழகன்.

இவர் நேற்றிரவு குமணன்சாவடி சாலைப்பகுதியில் ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தார்.
ஹட்கோ நகர் சந்திப்பு அருகே இருசக்கர வாகனத்தில் வந்த 3 பேரை விசாரித்து உள்ளார்.
அவர்கள் குற்றச்செயல்களில் தொடர்புடையவர்களா என சோதனையிட போட்டோ எடுத்துள்ளார்.

அப்போது அவா்கள் வீச்சரிவாளை கொண்டு காவலரை தாக்கியுள்ளனர்.
அன்பழகனுக்கு கை, தொடை பகுதிகளில் பலமான வெட்டு காயங்கள் விழுந்தன.
காவலர் அன்பழகனின் செல்போனை பறித்துக்கொண்டு 3 பேரும் இருசக்கர வாகனத்தில் தப்பி சென்றுவிட்டனர்.அன்பழகன் தனியார் மருத்துவமனையில் சிகிச்சைபெற்று வருகிறார்.
சம்பவம் நடந்த இடத்தில் இருந்த கண்காணிப்பு கேமரா உதவியுடன் குற்றவாளிகள் அடையாளம் காணப்பட்டனர்.
திருவேற்காடு பகுதியைச் சேர்ந்த சதீஸ்குமார், ரஞ்சித் மற்றும் பன்னீர்செல்வம் ஆகிய 3 ரவுடிகளை போலீசார் கைது செய்தனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here