ரங்கஸ்தலம் சினிமாவில் ஜிலு ஜிலுக்கவைக்கும் ஜிகேலு ராணி!

ஹைதராபாத்: ஆக்‌ஷன், த்ரில்லர், பிரமாண்டம் என்று சுற்றிவரும் தெலுங்கு பட உலகை கிராமத்துக்கு திரும்பவைக்கும் முயற்சியாக எடுக்கப்பட்டுள்ளது ரங்கஸ்தலம்.
இயக்குநர் சுகுமார் தனது 25வயதுவரை கிராமத்தில் வசித்தவர். அவர் கிராமத்து நினைவுகளை பசுமையாக தீட்டிவைத்துள்ள திரைப்படமாகவந்துள்ளது ரங்கஸ்தலம்.
இப்படத்தில் நடித்துள்ள ராம்சரண்-சமந்தா ஜோடி ஒவ்வொருவரின் முதல்காதலை நினைத்துப்பார்க்கும் வகையில் படம்பிடிக்கப்பட்டுள்ளது.
படத்தில் சிட்டிபாபு பெயரில்வரும் ராம்சரண் கேரக்டர் எனது சகோதரனை மனதில் கொண்டு உருவாக்கினேன் என்கிறார் சுகுமார்.
1980களில் உருவாகும் காதல்கதையாக ரூ.60கோடி பட்ஜெட்டில் எடுக்கப்பட்டுள்ளது இப்படம்.
ரங்கஸ்தலத்தில் கிராமத்து மண், மனிதர்களை அச்சுஅசலாக கேமராவுக்குள் சுருட்டியுள்ளார் ஆர்.ரத்னவேலு. இப்படத்தின் அனைத்துபாடல்களுக்கும் தலையாட்ட வைத்துள்ளார் தேவிஸ்ரீபிரசாத்.
படத்தில் உள்ள ஜிகேலுராணி பாடல் இணையத்தில் நம்பர்1 பாடலாக டிரெண்டிங்கில் உள்ளது.
ரங்கஸ்தலம் படத்தை மைத்ரி மூவிமேக்கர்ஸ் தயாரித்துள்ளது.
இப்படம் 1200 திரைகளில் மார்ச்30ல் ரிலீசாகிறது. ஆந்திரா, தெலங்கானாவில் 650திரைகளிலும் சென்னை, பெங்களூர் ஆகிய இந்தியாவின் முக்கிய நகரங்களிலும் ரங்கஸ்தலம் திரையிடப்படுகிறது.

அமெரிக்கா, ஐரோப்பாவிலும் இப்படம் திரைக்கு வருகிறது இப்படத்தின் டிரைலர் காட்சிக்கு ரசிகர்கள் இணையத்தில் அமோக வரவேற்பு அளித்துள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here