ரஜினியின் காலா வேடத்தில் சிம்பு!

சென்னை: சிம்பு ரஜினிகாந்தின் தீவிர ரசிகர் என்பது அனைவருக்கும் தெரியும். ரஜினியை போலவே வசனங்கள் பேசியும் கெட்டப்பும் போட்டு வருவார்.இந்நிலையில் தனுஷின் வொண்டர்பாட் பிலிம்ஸ் நிறுவனம் தயாரித்த காலா படத்தின் டீசர் சமீபத்தில் வெளியானது. டீசரில் ரஜினி க்யா ரே சிட்டிங்கா? என கருப்பு உடையணிந்து வசனம் பேசும் காட்சி மக்கள் மத்தியில் மிகவும் பிரபலம் அடைந்தது.இந்நிலையில் தனியார் தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் நடிகர் சிம்பு கலந்து கொண்டார். அந்த நிகழ்ச்சியில் காலா தோற்றத்தில் கருப்பு சட்டை, கருப்பு வேஷ்டி அணிந்து பேட்டி கொடுக்கும் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
சிம்பு தற்போது மணிரத்தனம் இயக்கத்தில் உருவாகி வரும் செக்க சிவந்த வானம் படத்தில் நடித்து வருகிறார் இவருடன் விஜய்சேதுபதியும் நடித்து வருகிறார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here