ஜீன்ஸ், லெகிங்ஸ் கோடையில் வேண்டாம்!

சென்னை: கோடை வெயிலின் தாக்கத்தில் இருந்து தப்பிக்க ஜீன்ஸ், லெகிங்ஸ் போன்ற ஆடைகளை தவிர்க்க ‌வேண்டும் என டாக்டர்கள் தெரிவிக்கின்றனர்.கோடையில், தோலில் வியர்வை அதிகப்படியாக தங்குவதால் தோல் வறண்டு எரிச்சலை ஏற்படுத்தும்.
இவற்றை தவிர்க்க ஜீன்ஸ், லெகின்ஸ் மற்றும் லெதர் போன்ற காற்றோட்டம் இல்லாத ஆடைகளை  அணியக்ககூடாது.

மெல்லிய, தளர்வான ஆடைகளை அணிய வேண்டும்.
கோடை காலங்களில் கிடைக்கக்கூடிய தர்பூசணி, வெள்ளரிக்காய் போன்ற நீர்ச்சத்துள்ள பழவகைகளை அதிக அளவில் எடுத்து கொள்ள வேண்டும்.

அதிக வியர்வை வெளியேறுவதால் சோர்வு, மயக்கம் ஏற்படும்.
இவற்றை தவிர்க்க அனைவரும் அதிக அளவில் தண்ணீர் குடிக்க வேண்டும்.
தண்ணீரில் குளுகோஸ் கலந்து அருந்துவதும் நல்ல பயன் அளிக்கும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here