ஆன்மிக அரசியல் ஞானி ! குருகோவிந்த்சிங் நாணயம் வெளியிட முடிவு!

மும்பை: ரிசர்வ் வங்கி குருகோவிந்த் சிங்கின் உருவம் பதித்த 350 ரூபாய் மதிப்புள்ள நாணயத்தை மத்திய அரசு அறிமுகம் செய்ய உள்ளது.
சீக்கியர்களின் பத்தாவது குருவான குருகோவிந்த் சிங்.பீகார் மாநிலம் பாட்னாவில் 1666ஆம் ஆண்டு பிறந்தவர். பத்தாவது சீக்கிய குருவாக குருகோவிந்த் சிங் இருந்தார்.
இவர் ஒரு ஆன்மீகவாதி, போர்வீரன், கவிஞர் மற்றும் தத்துவஞானி. இவரின் 350வது பிறந்தநாளை முன்னிட்டு, ரிசர்வ் வங்கி 350 ரூபாய் நாணயத்தை வெளியிடுகிறது.35 கிராம் எடையில், 44 மி.மீ., விட்டத்தில் இந்த நாணயம் உருவாக்கப்படும்.
50 சதவீதம் அலாய் சில்வர், 40 சதவீதம் செம்பு மற்றும் 5 சதவீதம் துத்தநாகம் இந்நாணயத்தில் சேர்க்கப்பட்டிருக்கும்.அசோக சக்கரம் சத்யமேவ ஜெயதே வாசகத்துடன், பாட்னாவில் குருகோவிந்த் சிங்கின்
புகழை பரப்பும் தக்த் ஸ்ரீஹர்மிந்தர் பாட்னா சாகிப் குருதுவாராவின் தோற்றம் இந்நாணயத்தில் இடம்பெறும்.
அதே சமயம் இந்நாணயம் குறிப்பிட்ட அள‌வே தயாரிக்கப்பட்டு வெளியிடப்பட உள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here