டேவிட் வார்னருக்கு அடிமேல் அடி!

மெல்போர்ன்: ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரரும், உலகம் முழுவதும் ரசிகர்களை கொண்ட வீரருமான டேவிட் வார்னருக்கு அடிமேல் அடி விழுந்து வருகிறது.
தென்னாப்பிரிக்கா-ஆஸ்திரேலியா அணிகள் இடையே டெஸ்ட் போட்டிகள் நடந்துவருகின்றன.
அதில் 3வது போட்டி கடந்த 22ம் தேதி தொடங்கி நடந்தது.

ஆஸ்திரேலிய வீரர் பேன்கிராப்ட் பந்தை சேதப்படுத்தும் விடியோ காட்சி வெளியாகி உலகை அதிர்ச்சிகுள்ளாக்கி உள்ளது.
இதனைத்தொடர்ந்து ஆஸி. அணியில் இருந்து கேப்டன் ஸ்மித், துணைகேப்டன் வார்னர், வீரர் பேன்கிராப்ட் விலகிக்கொள்ளும் நிர்பந்தம் ஏற்பட்டது.இந்நிலையில், வார்னரின் வணிக ஒப்பந்தங்களில் இருந்து விலகிக்கொள்கிறோம் என்று எல்ஜி ஆஸ்திரேலியா தெரிவித்துள்ளது. தற்போதைய ஒப்பந்தம் ஏப்ரல் மாதம் முடிவுக்கு வருவதாகவும், மீண்டும் ஒப்பந்தத்தை புதுப்பிக்க மாட்டோம் என்றும் அந்நிறுவனம் கூறியுள்ளது.டேவிட் வார்னர் ரூ.75கோடி பெற்று விளம்பரத்தூதராக பணியாற்றியது குறிப்பிடத்தக்கது.
அதேபோன்று, சன்ரைசர்ஸ் அணி கேப்டன் பொறுப்பில் இருந்து வார்னர் விலகுவாரா என்ற கேள்வி எழுந்தது.

ஸ்டீவ்ஸ்மித் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியில் இருந்து விலகியது, வார்னருக்கு நெருக்கடி அதிகரித்தது. எனவே சன்ரைசர்ஸ் கேப்டன் பொறுப்பில் இருந்து வார்னர் விலகிவிட்டதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகி உள்ளது.

வார்னர், ஸ்மித், பேன்கிராப்ட் உடனடியாக மெல்போர்ன் திரும்புமாறு ஆஸி. கிரிக்கெட்வாரியம் உத்தரவிட்டுள்ளது. நாடு கடத்தப்படுவதை போன்று முன்னணி வீரர்கள் தென்னாப்பிரிக்காவில் இருந்து திருப்பி அனுப்பிவைக்கப்படுகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here