பால் பாத்திரத்தில் சிக்கியது திருட்டுப் பூனை!

பெங்களூர்: பாலுக்கு ஆசைப்பட்ட பூனை பாத்திரத்தில் சிக்கிக்கொண்டு 3மணி நேரம் தவித்தது.

பெங்களூரை அடுத்த நெலமங்களா கெரகத்திகனூர் கிராமத்தை சேர்ந்தவர் கெங்கம்மா.

இவர் வீட்டில் பூனை வளர்த்து வந்தார். பூ வியாபாரம் செய்யும் இவர் நேற்று பாலை காய்ச்சி சொம்பில் வைத்துவிட்டு மறந்துபோய் வெளியே சென்றுள்ளார்.

வியாபாரம் முடித்து 3மணிநேரம் கழித்து வீட்டுக்குத்திரும்பிய இவர், பூனை பால் பாத்திரத்தில் சிக்கியிருப்பதை பார்த்து அதிர்ந்தார்.  வீடு முழுவதும் ஓடிவந்து பொருட்களை தாறுமாறாக சிதறவைத்திருந்தது பூனை. பின்னர் வீட்டின் வெளியே ஓடி தெருவில் அங்குமிங்கும் திரிந்தது.

அரைமணி நேரம் முயற்சிக்குப்பின் அதனை பிடித்து பால் சொம்பில் இருந்து பூனையின் தலையை வெளியே எடுத்தார் கெங்கம்மா.

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here