ஸ்டாலினுக்கு ஆளுநர் திடீர் அழைப்பு!

சென்னை: தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் செல்லும் ஆளுநர் பன்வாரிலால் புரோகித் அதன் காரணம் குறித்து எதிர்க்கட்சி தலைவரிடம் விளக்கி உள்ளார்.தமிழக ஆளுநராக நியமிக்கப்பட்டார் ஆளுநர் பன்வாரிலால் புரோகித்.
தமிழகம் முழுவதும் பயணித்து ஆய்வுப்பணிகளில் ஈடுபட்டு வருகிறார்.
இதற்கு திமுக உள்ளிட்ட கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடத்தி வருகின்றனர்.இந்நிலையில், திமுக செயல்தலைவரை ஆளுநர் அழைத்தார்.
ஆளுநருடன் ஸ்டாலின், துரைமுருகன் சந்திப்பு மாலையில் நடந்தது.பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய ஸ்டாலின்,
ஆளுநர் ஆய்வுப்பணியில் ஈடுபட்டு வருவதற்கு நேரடியாக அதிருப்தி தெரிவித்தேன்.
அவர் ஆய்வு செய்யவில்லை. வளர்ச்சிப்பணிகளை பார்வையிடுகிறேன் என்றார்.
சட்டப்பல்கலை துணைவேந்தராக பரிந்துரைக்கப்பட்டவர்களில் 3பேரில் ஒருவர் நியமனம் பெற்றுள்ளார்.

அவர்மீதான புகார்களை விசாரித்தேன். அதில் உண்மை இல்லை என்று தெரிவித்தார் என்றார்.
ஸ்டெர்லைட், நியூட்ரினோ திட்டங்களை எதிர்த்து திமுக தொடர்ந்து போராடும் என்றும் ஸ்டாலின் தெரிவித்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here