ஸ்டெர்லைட் எதிர்ப்பு போராட்டம் தீவிரம்!

தூத்துக்குடி: ஸ்டெர்லைட் தாமிர ஆலைக்கு எதிராக மக்கள் போராட்டம் தீவிரமடைகிறது.
ஸ்டெர்லைட் ஆலையில் இருந்துவரும் புகை, கழிவால் மக்களுக்கு நோய் ஏற்படுகிறது.இதனால் எதிர்கால தலைமுறை சீரழியநேரிடும் என மக்கள் வருந்துகின்றனர்.
ஆலையை நிரந்தரமாக மூடவேண்டும் என்று அவர்கள் குரல்கொடுத்து வருகின்றனர்.
ஸ்டெர்லைட் ஆலை விரிவாக்கப்பணிக்கு எதிராக தொடர் போராட்டங்களில் மக்கள் ஈடுபட்டு வருகின்றனர்.

 

அவர்கள் போராட்டம் கடந்த இரு தினங்களாக தீவிரமடைந்துள்ளது.
தூத்தூக்குடி, குமரரெட்டியாபுரம், ஸ்ரீபெரும்புதூர், புதியம்புத்தூர் உள்ளிட்ட கிராம மக்களுக்கு மாணவர்கள், இளைஞர் அமைப்புகள் ஆதரவு அதிகரித்து வருகிறது. லண்டன், கனடாவிலும் ஸ்டெர்லைட் எதிர்ப்பு போராட்டங்கள் துவங்கியுள்ளன.நான் பதவிக்கு வந்தால் ஸ்டெர்லைட் ஆலையைமூட முதல் உத்தரவு பிறப்பிப்பேன் என்று தெரிவித்துள்ளார் கமலஹாசன்.

வைகோ ஸ்டெர்லைட் ஆலை எதிர்ப்பு பாதயாத்திரை துவக்க உள்ளார்.
சசிகலா புஷ்பாவும் திருமணமான மறுதினமே பார்லி. வளாகத்தில் போராட்டம் நடத்தினார்.
இந்நிலையில், ஆட்சிக்கு எதிராகவும், தனக்கு எதிராகவும் மக்களை போராட தூண்டிவிடுவதாக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி கருத்து தெரிவித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here