பாஜக விருதை புறக்கணித்தார் ரூபா!

பெங்களூா்: சசிகலா சிறையில் சொகுசுவாழ்க்கை வாழ்ந்துவருவதை அம்பலப்படுத்திய அதிகாரி ரூபா.

காவல்துறையில் நேர்மையாகவும், சிறப்பாகவும் பணியாற்றும் இவரை பாராட்டி விருதுக்கு தேர்ந்தெடுத்தது ஒரு அறக்கட்டளை.
நம்ம பெங்களூரு என்ற அறக்கட்டளை, விருது மற்றும் பரிசு தொகையாக 2லட்சம் ரூபாய் ரூபாவுக்கு வழங்கவுள்ளதாக தெரிவித்தது.

விருதை வாங்க மறுத்த அதிகாரி ரூபா இந்த அறக்கட்ளை பாஜக எம்பி ராஜீவ் சந்திரசேகர் வழங்கும் நிதியில் இயங்குவதாக கூறப்படுகிறது. எனவே விருதை புறக்கணிப்பதாக கூறியுள்ளார்.

நம்ம பெங்களூரு அறக்கட்டளை இயக்குனா் ஸ்ரீதா் பாபி ஷெட்டிக்கு அனுப்பியுள்ள கடிதத்தில் ரூபா இவ்வாறு கூறியுள்ளார். மேலும் அரசு ஊழியர்களும், அரசியல் கட்சி சார்ந்த அமைப்புகள் இடம் இருந்து விலகி இருக்க வேண்டும். அப்போது தான் நடுநிலையோடும் செயல்பட முடியும் என்றார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here