பெண் குழந்தைகளுக்கு ஆபத்தான ப்ளாஸ்டிக்!!

மும்பை:பெண்மையை தாக்கும் அரக்கனாக பிளாஸ்டிக் விளங்கும் அதிர்ச்சி செய்தி வெளியாகி உள்ளது.
குழந்தைகளுக்கு பாலூட்ட பயன்படுத்துவது பிளாஸ்டிக் பாட்டில்கள்.

இதில் உள்ளது  பாலிகார்பனேட். பிஸ்பினால்-ஏ எனப்படும் இந்த வேதிப்பொருள் ப்ளாஸ்டிக் பாட்டில்களில் இருந்து கரைந்து நாம் சாப்பிடும் திரவங்களுடன் கலந்துவிடுகிறது.
இதனால் குழந்தைகள், பெண்களின் ஹார்மோன் செயல்பாடுகள் பாதிக்கப்படுகின்றனர்.இந்த வேதிப்பொருள் 18மாதம் வரையுள்ள குழந்தைகளையே அதிகம் பாதிக்கிறது.
இது ஈஸ்ட்ரோஜன் ஹார்மோனை விரைவாக சுரக்க தூண்டுகிறது.
இதனால் இளவயதில் குழந்தைகள் பூப்படைந்து விடுகிறார்கள்.
மேலும், உடல்பருமன், மறதி, சர்க்கரை நோய் பாதிப்பும் ஏற்படுகிறது.

நீங்கள் பயன்படுத்தும் பிளாஸ்டிக் பொருட்களில் பிஸ்பினால் இருப்பதை எளிதாக உறுதிசெய்துகொள்ளலாம்.
உங்கள் பாட்டில் முழுவதும் சோதனையிடுங்கள். அதன் வாய்ப்பகுதி அல்லது அடிப்பகுதியில் பிசி7 என்று இருந்தால் பிஸ்பினால் உள்ளது என்று புரிந்துகொள்ளுங்கள்.

இந்த பாட்டில்களை வெந்நீரால் சுத்தப்படுத்துவது, அடிக்கடி வெயிலில் காயவைப்பது.
கொதி நிலையில் உள்ள திரவங்களை ஊற்றி இறுக்கமாக மூடுவது போன்றவற்றால் பிஸ்பினால் பாதிப்பை சற்று குறைக்க முடியும்.
இவ்வகை பொருட்களை உபயோகப்படுத்தாமல் இருப்பது நல்லது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here