பழனி முருகர் சிலையை வெளிநாட்டுக்கு கடத்த முயற்சி!

சென்னை: பழனியில் போகர் சித்தர் உருவாக்கிய நவபாசாண முருகர் சிலையை வெளிநாட்டுக்கு கடத்த நடந்த முயற்சி வெளிச்சத்துக்கு வந்துள்ளது.

பலநூறு வருடங்களுக்கு முன்னர் தமிழக சித்தர் மரபில் வந்த போகர் பழனியில் முருகர் தண்டாயுதபாணியாக நிற்கும் சிலையை உருவாக்கினார்.
ஒன்பது வகை பாசாணங்கள் என்னும் வேதிப்பொருட்களால் இச்சிலை உருவாக்கப்பட்டுள்ளது.
அது விசேஷமான மருத்துவகுணம் கொண்டுள்ளது. எனவே, இதனை வெளிநாட்டுக்கு கடத்த அரசியல்வாதிகள் திட்டமிட்டுள்ளனர்.இதற்காக முருகர் சிலையை மறைத்து ஐம்பொன்னால் ஆனது என்று சொல்லப்பட்ட போலியான சிலையை உருவாக்கி வைத்தனர்.
இதற்கு கடும் எதிர்ப்பு கிளம்பியது. அதனைத்தொடர்ந்து அச்சிலை அகற்றப்பட்டு தனி இடத்தில் பூஜை நடத்தப்பட்டு வந்தது.
அதனை பரிசோதித்ததில் அது கலப்படம் செய்யப்பட்ட உலோகத்தால் ஆன சிலை என்று தெரியவந்தது.

இச்சிலையை வடிவமைத்த பத்மஸ்ரீ விருதுபெற்ற ஸ்தபதி முத்தையா, பழனிகோவில் நிர்வாகியாக பணியாற்றிய ராஜா கைது செய்யப்பட்டனர்.
விசாரணையில், பல்வேறு திடுக்கிடும் தகவல்கள் வெளியாகி உள்ளன.அரசியல்வாதிகள், தொழிலதிபர்கள் திட்டமிட்டு பழனிசிலையை கடத்த முயன்றதாகவும், அதற்காக போலியாக ஐம்பொன் சிலை செய்ததாகவும் அவர்கள் விசாரணையில் தெரிவித்துள்ளனர்.
இதுகுறித்து மேலும் விசாரணை நடத்திவருகிறது சிலைகடத்தல் தடுப்புப்பிரிவு அதிகாரி பொன்.மாணிக்கவேல் தலைமையிலான போலீஸ் அதிகாரிகள் குழு.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here