கர்நாடக தேர்தல் தேதியால் சர்ச்சை!

பெங்களூர்: கர்நாடக சட்டப்பேரவை தேர்தல் தேதி அதிகாரப்பூர்வ அறிவிப்புக்கு முன்னரே லீக் ஆனது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தலைமைத் தேர்தல் ஆணையர் ஓம் பிரகாஷ் ராவத் கர்நாடக பேரவை தேர்தல் தேதியை இன்று அறிவித்தார்.

224 தொகுதிகளுக்கும் ஒரேநாளில் தேர்தல் நடைபெறும் என்று அவர் தெரிவித்தார்.ஆனால், பாஜக ஐடி செல் பிரிவு நிர்வாகி அமித் மாலவியா தேர்தல் ஆணையம் அறிவிக்கும் முன்னரே மே.12 தேர்தல் தேதி என்று டுவிட்டரில் தெரிவித்துள்ளார்.

இதேபோன்று காங்கிரஸ் சமூக ஊடகப்பிரிவை சேர்ந்த ஸ்ரீவத்சா என்பவரும் தேர்தல் தேதியை முன்கூட்டியே தெரிவித்துள்ளார்.
இது சமூக ஊடகங்களில் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

இதைத்தொடர்ந்து தனது பதிவைநீக்கியுள்ள மாலவியா, ஆங்கில சேனலை பார்த்து தான் தெரிவித்ததாக கூறியுள்ளார்.
இதுகுறித்து விசாரித்து நடவடிக்கை எடுக்கப்படும் என்று தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here