மே12ல் கர்நாடக சட்டசபை தேர்தல்!

பெங்களூர்: கர்நாடக சட்டப்பேரவை தேர்தல் மே12ம் தேதி நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.கர்நாடகாவில் காங்கிரஸை சேர்ந்த சித்தராமையா முதல்வராக உள்ளார். அவரது பதவிக்காலம், மே மாதம் 28ம் தேதி முடிவடைகிறது.
புதிய அரசை தேர்வு செய்வதற்கான தேர்தல் தேதி இன்று அறிவிக்கப்பட்டது.தலைமைத் தேர்தல் ஆணையர் ஓம் பிரகாஷ் ராவத் இன்று காலை அறிவித்தார்.
மே12ம் தேதி ஒரே நாளில் 224 தொகுதிகளுக்கும் தேர்தல் நடைபெறும் என்றார்.வேட்புமனுத் தாக்கல் ஏப்ரல் 17ம் தேதி தொடங்கி ஏப்ரல் 24ம் தேதி வரை நடைபெறும்.
மனுக்கள் மீதான பரிசீலனை ஏப்ரல் 25ல் நடைபெறும்.
வேட்புமனுவை திரும்பப்பெற ஏப்.27 கடைசி நாளாகும்.
மே12ம் தேதி ஒரேகட்டமாக தேர்தல் நடைபெறுகிறது.
மே15ம் தேதி வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படும்.

224 தொகுதிகளிலும் வாக்கு எந்திரங்களே பயன்படுத்தப்படும்.
யாருக்கு வாக்களித்தோம் என்பதை உறுதி செய்யும் சீட்டும் வழங்கப்படும். இவ்வாறு தேர்தல் ஆணையாளர் தெரிவித்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here