போர்பஸ் பட்டியலில் அனுஷ்கா, சிந்து!

மும்பை: ஆசிய நாடுகளில் தாக்கத்தை ஏற்படுத்திய 30வயதுக்குட்பட்டவர்கள் பட்டியலை போர்பஸ் பத்திரிகை வெளியிட்டுள்ளது.பிரபல வணிக பத்திரிகையான போர்பஸ் ஆசிய பசிபிக் மண்டல நாடுகளின் உயர்வுக்கு வித்திட்டவர்கள் பட்டியலை வெளியிட்டு வருகிறது.
இந்த ஆண்டு பட்டியலில் நடிகை அனுஷ்கா ஷர்மா, பேட்மிண்டன் வீராங்கனை பிவி சிந்து ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.2007ல் மாடலிங் துறையில் நுழைந்தார் அனுஷ்கா. 2008முதல் நடிக்க தொடங்கினார். தற்போது இந்தியாவில் அதிகம் சம்பளம் வாங்கும் நடிகையாக உள்ளார் அனுஷ்கா என்று போர்பஸ் தெரிவித்துள்ளது.
இதேபோன்று, ஒலிம்பிக்கில் வெள்ளிப்பதக்கம் வென்ற சிந்துவுக்கு பாராட்டு மழையும், பரிசுகளும் குவிந்துள்ளன. பாட்மிண்டனில் 22வயதில் சர்வதேச பட்டங்களை வென்று பி.வி.சிந்து இப்பட்டியலில் இடம்பெற்றுள்ளார்.ஆசியாவின் 24 நாடுகளை சேர்ந்த 300பேர் இப்பட்டியலில் இடம்பெற்றுள்ளனர். வடகொரியா, அசர்பைஜன் நாடுகளின் இளையோர் முதன்முறையாக இவ்வருட பட்டியலில் சேர்ந்துள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here