விஜய் ரசிகர்களை வளைக்கிறது அதிமுக!

சென்னை: விஜய் ரசிகர்களை வளைக்க அதிமுக நடவடிக்கை எடுத்து வருகிறது.
ஜெயலலிதா மறைவுக்குப்பின் நடிகர்கள் அரசியலில் தீவிர கவனம் விஷால் தேர்தல் களத்தில் குதித்தார்.
கமலஹாசன், ரஜினிகாந்த், விஷால் என்று நடிகர்கள் அரசியலுக்கு வந்துகொண்டுள்ளனர்.

இந்நிலையில், நடிகர் விஜய் தனது ரசிகர்களை சந்தித்து வருகிறார் என்ற செய்தி பரவியது.
இது அதிமுகவினரை கலங்க வைத்துள்ளது. அதிமுகவின் தேர்தல்பணிகளில் விஜய் ரசிகர்கள் உதவி செய்துவந்தனர்.

ரஜினி, கமலை சமாளிக்க விஜய் ரசிகர்கள் உதவுவார்கள் என்று அக்கட்சியின் தலைவர்கள் மிகுந்த எதிர்பார்ப்புடன் உள்ளனர்.
பாஜக நடிகர் விஜயை எதிர்த்தபோதும் அதிமுக தலைமை அவர்களுடன் அன்புடன் நடத்திவருகிறது.

விஜயும் தனிக்கட்சி அல்லது திமுகவுக்கு ஆதரவு என்றால் என்னசெய்வது என்ற தவிப்பு அதிமுகவினருக்கு ஏற்பட்டுள்ளது.
இதனால் அதிமுகவினரை வளைக்கும் முயற்சியில் அவர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.
நாமக்கல்லில் நடைபெற்ற நடிகரின் 44ம் பிறந்தநாள் விழாவில் அமைச்சர்கள் தங்கமணி, சரோஜா, எம்பிசுந்தரம், எம்.எல்.ஏ.பாஸ்கர் என்று அதிமுக பிரமுகர்கள் திரண்டுவந்தனர்.அமைச்சர் தங்கமணி பேசுகையில், 2011ல் ஜெயலலிதா முதல்வர் ஆவதற்கு விஜய் ரசிகர்கள் ஆதரவு தந்தனர். வருங்காலத்தில் எங்களுக்கு ஆதரவாக இருக்க வேண்டும் என்றார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here