புருவம் அசைத்து போக்குவரத்தை சீர்செய்கிறார் பிரியா வாரியர்!!

வதோரா: ஒரு அட்டகாச காதல்(ஒரு அடார் லவ்) என்ற படத்தில் இடம்பெற்ற மாணிக்க மலரான பூவே என்ற பாடல் இணையத்தில் வெளியானது.

அந்த பாடலில் பிரியா வாரியர் புருவத்தை உயர்த்தி கண்ணசைக்கும் காட்சியைக் கண்டு உலகமே சொக்கிப்போனது, விடியோ உலகம் முழுவதும் ஒரே இரவில் பரவி பிரியா வாரியருக்கு ரசிகர்களை உருவாக்கித்தந்தது.
இந்நிலையில் வதோரா போக்குவரத்து காவல்துறையினர் பிரியர் வாரியரின் கண் அடிக்கும் புகைப்படத்தை தங்களின் போக்குவரத்து விழிப்புணர்வை ஏற்படுத்தும் விளம்பரப்படத்தில் பயன்படுத்தி உள்ளனர்.

சாலை விபத்துக்களை தவிர்க்க பிரியா வாரியர் கண்ணடிப்பது போன்ற படத்தை வைத்து, அதில் விபத்துக்கள் கண் இமைக்கும் நேரத்தில் நடக்கும்.கவனச்சிதறல் இல்லாமல் வாகனத்தை ஓட்டவும் என வாசம் அடங்கிய விளம்பரப்பலகையினை நகரம் முழுவதும் முக்கிய சாலைகள், சிக்னல்களில் வைத்துள்ளனர். மேலும் காவல்துறையினர் விளம்பரத்தை தனது டுவிட்டர் பக்கத்திலும் வெளியிட்டுள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here