பலாத்காரம் செய்த வாலிபர்களுக்கு பொதுமக்கள் தண்டனை!

போபால்: பலாத்கார வழக்கில் கைதான 4வாலிபர்களை சாலைகளில் அழைத்துவந்து பொதுமக்களால் தண்டிக்க வைத்தனர் போலீசார்.

போபால் நகரின் மிஸ்ராத் பகுதியில் வசித்து வருபவர் ஜானு(பெயர் மாற்றப்பட்டுள்ளது). பட்டப்படிப்பு முடித்துள்ள இவர் வங்கித்தேர்வுக்காக பயிற்சி எடுத்து வருகிறார். இவருடன் படித்து வருபவர் ஷைலேந்திர சிங்.சனிக்கிழமை வழக்கம்போல் பயிற்சி முடித்து திரும்பிய ஜானுவை தனது பைக்கில் வருமாறு ஷைலேந்திர சிங் கட்டாயப்படுத்தினார். வரமறுத்த ஜானுவின் செல்போனை பறித்துக்கொண்டார்.ஜானு தன்னுடன் வராவிட்டால் செல்போனை தரமாட்டேன் என்று தெரிவித்தார்.
ஜானுவை தனது மோட்டார்சைக்கிளில் ஏற்றிக்கொண்டு 3கி.மீ. தூரத்தில் உள்ள நண்பர் வீட்டுக்கு சென்றார்.
அங்கிருந்த 3நண்பர்கள் முன்னிலையில் ஜானுவை தாக்கினார். அவரை ஷைலேந்திரா, தீரஜ் ஆகியோர் பலாத்காரம் செய்தனர். அவர்களது நண்பர்கள் சீமான், சோனு ஆகியோரும் உடனிருந்துள்ளனர்.இதுகுறித்து யாரிடம் கூறினாலும், ஜானுவையும், அவர் குடும்பத்தையும் கொன்றுவிடுவதாக அவர்கள் மிரட்டியுள்ளனர். வீடு திரும்பியதும் தாயிடம் நடந்தவற்றை கூறியுள்ளார் ஜானு.ஜானு கொடுத்த புகாரின்பேரில் குற்றவாளிகள் 4பேரும் கைது செய்யப்பட்டனர்.
அவர்களை போபால் தெருக்களில் போலீசார் ஊர்வலமாக அழைத்துவந்தனர்.
அப்போது பொதுமக்களும், காவலர்களும் வாலிபர்களை கண்டித்தனர். சிலர் அவர்களை தாக்கவும் செய்தனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here