ஐபோன்10க்கு போட்டியாக சீன நிறுவனங்களின் புதிய போன்கள்!!

மும்பை: ஐபோன்10க்கு போட்டியாக சீன நிறுவனங்கள் புதிய செல்போன்களை விற்பனைக்கு கொண்டுவந்துள்ளன.
ஆப்பிள் நிறுவனம் கடந்த செப்டம்பர் மாதம் ஆப்பிள்10 மாடல் போன்களை விற்பனைக்கு கொண்டுவந்தது.3டி ஈமோஜி, செயற்கை நுண்ணறிவை முதன்முதலில் பயன்படுத்திய செல்போன், முழுத்திரை பயன்பாடு, முகத்தை அடையாளமாக்கி போனை திறக்கும் வசதி என்று பல்வேறு சிறப்பம்சங்கள் இந்த போனில் உள்ளன.
இத்துடன் ஐபோன் 8, ஐபோன்8 ப்ளஸ் ஆகிய இரு மாடல்களும் வெளியாகின.
இருந்தபோது ஐபோன்10 விற்பனை உலகளவில் எதிர்பார்த்த அளவுக்கு இல்லை.ஆப்பிள் நிறுவனம் இந்தியா உள்ளிட்ட பல நாடுகளில் வரிச்சலுகையை எதிர்பார்த்தது. இதனால் சலுகை விலையில் செல்போன்களை தயாரிக்க முடியுமென்று நம்பியது.
ஆனால் பல நாடுகள் ஆப்பிளின் திட்டத்துக்கு ஒத்துக்கொள்ளவில்லை.
இந்நிலையில் ஐபோன்10ல் உள்ள சிறப்பம்சங்களை கொண்ட புதிய மாடல்களை களம் இறக்குவதில் சீன செல்போன் தயாரிப்பு நிறுவனங்கள் தீவிரம் காட்டுகின்றன.ஓப்போ எப்7 மாடலில் 6.23இஞ்ச் முழு ஹெச்டி டிஸ்ப்ளே உள்ளது. மிடியா டெக் நிறுவனத்தின் பி60ஆக்டோகோர் பிராசரில் இயங்கும் இந்த போன்கள் 4ஜிபி/64ஜிபி, 6ஜிபி/128ஜிபி மாடல்களில் விற்பனைக்கு கிடைக்கும்.

 

ஆண்டிராய்டு 8.1ஓரியா ப்ளாட்பார்ம், 3,400எம்.ஏ.ஹெச்.பாட்டரி, முகத்தால் அன்லாக் செய்யும் வசதி, 2சிம், 4ஜி வோல்ட் தொழில்நுட்பத்தில் இயங்கும்.இதேபோன்று விவோ நிறுவனமும் வி9 என்ற புதிய மாடலை விற்பனைக்கு கொண்டுவந்துள்ளது. 6.3இஞ்ச் ஹெச்டி டிஸ்ப்ளே. முழுத்திரையும் பயன்படுத்தும் வசதி. ஸ்நாப்டிராகன் 626 ஆக்டாகோர் பிராசர் மற்றும் ஆட்ரினோ கிராபிக்ஸ் சிப் ஆகியவற்றைக்கொண்டுள்ளது. 4ஜிபி/64ஜிபி திறனில் விற்பனைக்கு வந்துள்ளது. 16, 5 மெகாபிக்சல் என்ற இரு கேமராக்களும் 24மெகா பிக்சல் செல்பி கேமராவை கொண்டுள்ளது.இந்த மாடல் போன்களை முகத்தை அடையாளமாக கொண்டு திறக்கலாம். ஆண்டிராய்டு 8.1ஓரியோ ப்ளாட்பாரத்தில் இயங்கும் இந்த போன்கள் விரைவில் பேட்டரி சார்ஜ் ஆகுமாறு புதிய தொழில்நுட்பத்தை கொண்டுள்ளது.

இதேபோன்று சியோமி நிறுவனமும் முழுத்திரை, மிகவும் மெல்லியபோன், முகத்தினால் செல்போனை அன்லாக் செய்யும் வசதி, 6.3 இஞ்ச் டிஸ்ப்ளே என்று பல்வேறு சிறப்பம்சங்களுடன் எம்.ஐ. மிக்ஸ்2எஸ் என்ற மாடல்போனை விரைவில் விற்பனைக்கு கொண்டுவரவுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here