பலம் தரும் பழவகைகள்!

சென்னை:  வாழைப்பழம் ஒரு மனிதனுக்கு கிடைக்ககூடிய ஊட்டச்சத்து மட்டுமல்ல பல நோய்கள் வராமல் தடுக்கக்கூடிய நோய்தடுப்பு சக்தியுடையது.

உலகத்தில் எல்லா நேரங்களிலும் கிடைக்கும் ஒரே கனிவகை வாழைப்பழம், இவை மூன்று இயற்கையான சுவை கொண்டது சுக்ரோஸ், பிரக்டோஸ், குளுக்கோஸ் மற்றும் குடலுக்கு தேவையான நார்ச்சத்தினை  கொண்டது.ஒரு மனிதனுக்கு கிடைக்கக் கூடிய ஊட்டச்சத்து மட்டுமல்ல பல நோய்களை வராமல் தடுக்கிறது. வாழைப்பழம்  பல ரகங்களாக பல குணமுடையும் தன்மைகளை கொண்டுள்ளது. அதன் பயன்கள்குறித்து பார்க்கலாம்.
பூவன் பழம்

அளவில் சிறியதாக உள்ள பூவன் பழம் ஒரு வாழைத்தாரில் 100 அல்லது 150 பழங்கள் இருக்கும் இவை மூலநோயை குணப்படுத்தும்.பேயன் பழம்
மனிதனின் உடலின் சூட்டை குறைக்கவும், வயிற்றில் ஏற்படும் குடல்புண்கள் வயிறு சம்பந்தமான நோய்களை தணிக்கச் செய்யும். இதை தினமும் சாப்பிட்டால் குடலின் உட்பகுதி மென்மையாகி அதிகமான அமிலத்தன்மை ஏற்படுத்தாமல் குடற்புண்ணை அழிப்பதுடன் குடற்புண் வராமல் காக்கிறது.
ஏலக்கி பழம்
ஒரு மனிதனுக்கு மலச்சிக்கல் வந்துவிட்டால் அவனது மனித குணமே மாறிவிடும். அதற்கு ஒரே வழி உங்கள் உணவில் தினமும் வாழைப்பழத்தைச் சேர்த்து சாப்பிடுங்கள். அந்தவகையில் அளவில் சிறியதாக உள்ள எலைச்சி மலச்சிக்கலுக்கு சிறந்தது.கற்பூரவள்ளி பழம்
வாழைப்பழங்களில் மிகவும் சுவையானது எளிதில் பழுத்துவிடும் இப்பழத்தை நீண்ட நாட்களுக்கு வைத்திருந்து உண்பது கடினம்.ரஸ்தாளி பழம்                                                                                                 ரஸ்தாளி மருத்துவ குணங்கள் குறைவு எனினும் சுவைமிகுந்தது, பழங்களைக் கொண்டு தயாரிக்கும் இனிப்புகள் ரஸ்தாளி சேர்த்துக்கொள்ளப்படுகிறது. இப்பழம் மனித உடலில் ஏற்படும் வறட்சியை முற்றிலும் தடுத்து, காமாலை நோயை ஏற்படுவதை தடுக்கிறது.செவ்வாழை
மனித உடலில் உள்ள செல்களின் செயல்பாட்டை சீராக்குகிறது. உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரித்து உடலுக்கு தாது பலத்தை அதிகரிக்கிறது.நேந்திரம்பழம்
புரதங்கள் நிறைந்த இப்பழத்தில் மனித உடலிலுள்ள குடற்புழுக்களை நீக்குகிறது. இப்பழத்தை கூட்டு பொறியல் என்று சமைத்தோ, அவித்தோ, சிப்ஸ் வடிவிலோ விரும்பி உண்ணலாம்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here