சவுதியை குறிவைத்துவந்த 7 ஏவுகணைகள் அழிப்பு!

சவுதி அரேபியா: ஏமனிலிருந்து சவுதிஅரேபியாவின் எல்லைக்குள் ஏவப்பட்ட ஏழு ஏவுகணைகள் நடுவானில் தடுத்து அழிக்கப்பட்டுள்ளன.ஏமன் நாட்டில் உள்நாட்டுப்போர் நடந்து வருகிறது. அதில் சவுதிஅரேபியா தலைமையிலான கூட்டுப்படை தலையிட்டு கலகக்காரர்களை ஒடுக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டு வருகிறது.
மூன்று ஆண்டுகளாக இப்பணியில் சவுதி அரேபியா ஈடுபட்டு வருகிறது.

இதனை எதிர்த்து ஏமனில் மிகப்பெரும் மக்கள் தன்னெழுச்சி போராட்டம் நடந்தது.
இதற்கிடையே, ஏமனில் உள்ள கிளர்ச்சியாளர்கள் ரியாத் சர்வதேச விமான நிலையம், அங்குள்ள பெட்ரோ கெமிக்கல் தொழிற்சாலை மீது ஏவுகணைகள் வீசப்பட்டுள்ளன.இவற்றை சவுதி ராணுவம் வெற்றிகரமாக தடுத்து சேதத்தை தவிர்த்துள்ளது.
இருந்தபோதும் ஒருவர் இறந்துள்ளார். ஏவுகணை தடுப்புத்திட்டம் வெற்றிகரமாக முடிந்தது என்றபோதும் எதிர்பார்த்தபடி தடுப்பு ஏவுகணை செயல்படவில்லை என்ற விமர்சனம் எழுந்துள்ளது.தடுப்பு ஏவுகணைகளை அமெரிக்காவில் இருந்து வாங்கி சவுதி பயன்படுத்தி வருகிறது. இத்தாக்குதலுக்கு கத்தார் உள்ளிட்ட மத்தியஆசிய நாடுகள் அனைத்தும் கண்டனம் தெரிவித்துள்ளன.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here