ஆண்களுக்கான கருத்தடை மாத்திரை ரெடி!

வாஷிங்டன்: ஆண்களுக்கான கருத்தடை மாத்திரை வெற்றிகரமாக பரிசோதிக்கப்பட்டுள்ளது.
குழந்தைகள் உருவாவதை தவிர்க்க நினைப்பவர்கள் கருத்தடைக்கான பல்வேறு உத்திகளை கையாண்டு வருகின்றனர்.

ஆண்கள் பெரும்பாலும் ஆணுறைகள் எனப்படும் காண்டம்களையே அதிகம் பயன்படுத்துகின்றனர்.
பெண்களுக்கு பலவகையான மருந்து, மாத்திரை, ஊசி, காண்டம், காப்பர் டி போன்றவை பயன்படுத்தப்படுகின்றன.
பெண்கள் கருத்தடை மாத்திரைகள் எடுத்துக்கொள்வதால் அவர்களுக்கு ஹார்மோன் கோளாறுகள் ஏற்படுவதாக தெரியவந்துள்ளது.ஆண்கள் கருத்தடை சிகிச்சை மேற்கொள்வதால் வீரியப்பிரச்சனைகள் ஏற்படுகின்றன என்ற பொதுவான கருத்து நிலவுகிறது.
ஆண்களுக்கான கருத்தடை மருந்துகள் தொடர்பான ஆய்வு உலகம் முழுவதும் நடந்து வருகிறது.
ஆண்களின் மெடபாலிசம் வேகமானது என்பதால் மருந்து மிகவும் குறைந்த நேரம் வரையில் உடலில் தங்கியிருக்கும். அவர்களுடையா ஹார்மோன்களில் எந்த ஒரு பாதிப்பும் ஏற்படுத்தாது என்று நிபுணர்கள் தெரிவித்தனர்.

கொழுப்பு அமிலங்கள் அடங்கிய டி.எம்.ஏ.யூ. என்ற வேதிப்பொருளில் இந்த மாத்திரை செய்யப்பட்டுள்ளது.
இது 100, 200, 400 வீரியங்களில் விற்பனைக்கு கொண்டுவரப்பட்டுள்ளது.
400எம்ஜி வீரியத்தில் மாத்திரை எடுத்துக்கொண்டால் விந்தணு உற்பத்தியையே தடை செய்துவிடுகிறது.


வாஷிங்டன் மருந்து ஆய்வு மையத்தில் பரிசோதிக்கப்பட்ட கருத்தடை மாத்திரைகள் 89சதவீதம் நம்பகத்தன்மை வாய்ந்தவை. தினமும் ஒன்று சாப்பிட்டால் போதும் என்று டாக்டர்கள் தெரிவித்துள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here