விரல்களால் வியாதிகள் தீரும்!

மும்பை: உங்கள் கைகளிலேயே உடல் வியாதிகளை தீர்த்துக்கொள்ளும் வழிமுறை உள்ளது.
அக்குபிரஷர் எனப்படும் வைத்திய முறையில் உடலின் குறிப்பிட்ட புள்ளிகளை அழுத்தவும், தேய்த்தும் அப்பகுதியில் உயிர்சக்தி ஓட்டத்தை சீர்படுத்துகின்றனர்.
இதனால் உடல்நலம் சீராகின்றது. வெளிநாடுகளில் இந்த குணப்படுத்தும் முறை பரவலாகி வருகிறது.உள்ளங்கையில் உள்ள விரல்களிலேயே அக்குபிரஷர் அளித்து நோய்களை குணப்படுத்தமுடியும்.
பெருவிரல்: இந்தவிரல் இருதயம், நுரையீரலுடன் தொடர்புடையது.
மூச்சுத்திணறல், சுவாச பிரச்சனை, படபடப்பு ஆகியவற்றை நீக்க பெருவிரலை நன்கு அழுத்தி கீழிருந்து மேலாகவும், மேலிருந்து கீழாகவும் தேய்க்க வேண்டும்.
சுட்டுவிரல்: இது உணவுப்பாதையுடன் தொடர்புடையது. மலச்சிக்கல், பேதி, வயிற்றில் உள்ள பிரச்சனைகளுக்கு இந்த விரலை அழுத்தி கீழிருந்து மேலாகவும், மேலிருந்து கீழாகவும் தேய்க்க வேண்டும்.நடுவிரல்: தூக்கமின்மை, ஒரே இடத்தில் அமர்ந்து வேலை செய்வதால் ஏற்படும் சிரமங்களுக்கு இந்த விரலை தேய்த்து தீர்வு காணலாம். நடுவிரலில் பின்புறத்தை நன்கு அழுத்தம் கொடுத்து தேய்ப்பதால் தூக்கம் சுலபமாக வரும்.
மோதிர விரல்:மோதிரவிரலும் மலச்சிக்கல் பிரச்சனைகளை தீர்க்கும். சுட்டுவிரலுடன் சேர்த்து இந்த விரலையும் மசாஜ் செய்யலாம்.சுண்டுவிரல்: உடலின் தலை, கழுத்து பகுதிகளுடன் தொடர்புடையது. தலைவலி, கழுத்துவலி உடையவர்கள் இந்த விரலை அழுத்தி தேய்த்து மசாஜ் செய்யலாம்.
உள்ளங்கை இரண்டையும் ஒன்றோடு ஒன்று அழுத்தி தேய்ப்பதால் சீரான அழுத்தம் கிடைக்கும்.
இப்பயிற்சியை எளிமையாக இருகைகளையும் சேர்த்து தட்டவும் செய்யலாம்.
தினமும் காலை, மாலை என்று இருவேளையும் இப்பயிற்சியை செய்துவருவது கூடுதல் நன்மை தரும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here