காவிரி மேலாண்மை வாரியம்! ஸ்டாலினுக்கு அதிமுக நெருக்கடி!!

சென்னை: காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க ஆதரவு தெரிவிக்க கர்நாடக காங்கிரஸ் அரசுக்கு அதனுடன் கூட்டணியில் உள்ள திமுக காங்கிரஸ் தலைமைக்கு அழுத்தம் கொடுக்கவேண்டும் இல்லை எனில் காங்கிரஸ் கூட்டணியிலிருந்து திமுக விலக வேண்டும் என அமைச்சர் ஜெயக்குமார் கூறியுள்ளார்.

செய்தியாளர்களிடம் பேசிய மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார், காவிரி மேலாண்மை வாரியம் அமைக்குமாறு கர்நாடக காங்கிரஸ் அரசுக்கு சோனியாகாந்தியும், ராகுல் காந்தியும் அழுத்தம் கொடுக்க ஸ்டாலின் வலியுறுத்த வேண்டும். அவ்வாறு அழுத்தம் கொடுக்க தவறினால் காங்கிரஸ் கூட்டணியில் இருந்து தி.மு.க. விலக வேண்டும்.

மத்திய அரசின் திட்டத்துக்கு எதிராக போராட தென் மாநிலங்களுக்கு கர்நாடகம் அழைப்பு விடுத்துள்ளது. தென் மாநில முதல்வர்களுக்கு அழைப்பு விடுத்து கர்நாடக முதல்வர் சித்தராமையா கடிதம் எழுதியுள்ளார்.

மாநிலத்தின் நிதி தன்னாட்சி பேணி காக்க வேண்டும், நிதி பகிர்வு உயர்ந்தாலும் தமிழகத்துக்கான வருவாய் சரியாக கிடைக்கவில்லை. தமிழகத்துக்கான மத்திய அரசின் நிதி குறைக்கப்பட்டால் போராட்டம் நடத்துவோம் என ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here