பேஸ்புக்கில் சர்ச்சை பதிவு! கல்லூரி மாணவி ஓராண்டு சஸ்பெண்ட்!!

மத்தியப்பிரதேசம்: பேஸ்புக் பதிவால் கல்லூரியில் இருந்து சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார் ஒரு மாணவி. மத்திய பிரதேசத்தை சேர்ந்தபோபாலில் உள்ள மோதிலால் விக்யான் மஹா வித்யாலயா கல்லூரி மாணவி அஸ்மாகான். இளங்கலை அறிவியல் இரண்டாம் ஆண்டு படித்து வந்தார்.

சுதந்திரப் போராட்ட வீரர் பகத் சிங்கின் நினைவு தினமான நேற்று மாணவி அஸ்மா, கல்லுாரி வளாகத்தில் நிகழ்ச்சி நடத்த கல்லூரி நிர்வாகத்திடம் அனுமதி கேட்டார். ஆனால் அதற்கு கல்லூரி நிர்வாகம் மறுப்பு தெரிவித்தது.

இதனையடுத்து கோபமடைந்த அஸ்மா கான், பகத் சிங் பற்றி நிகழ்ச்சி நடத்த தனக்கு அனுமதி அளிக்க மறுத்த ஆசிரியர்கள், தேச விரோதிகள் என பேஸ்புக்கில் பதிவிட்டார்.
இது சமூக வலைதளங்களில் வேகமாக பரவியது. இதனால் அஸ்மா கானை, கல்லுாரியில் இருந்து ஒரு ஆண்டு நீக்குவதாக நிர்வாகம் அறிவித்தது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here