ஜியோ போனில் விரைவில் வாட்ஸ்ஆப்!

மும்பை:ரிலையன்ஸ் ஜியோ செல்போனில் விரைவில் வாட்ஸ் ஆப் பயன்படுத்த வாய்ப்பு ஏற்படும்.4 ஜி வசதியுடன் ரூ.1500க்கு செல்போன்களை விற்று வருகிறது ஜியோ நிறுவனம்.
இத்தொகை முழுவதையும் ரிசார்ஜ் செய்து திரும்பப்பெற முடியும் என்றும் அறிவித்துள்ளது.இணையவசதி இருந்தாலும் இந்த போனில் வாட்ஸ் ஆப் வசதி இல்லை என்ற ஆதங்கம் பயனாளிகளிடம் இருந்துவந்தது.
வாட்ஸ் ஆப்பின் புதிய பதிப்பு தற்போது சோதனை செய்யப்பட்டு வருகிறது.

அதில் ஜியோ போனில் பயன்படுத்தும் கய் ஆபரேட்டிங் சிஸ்டம், விண்டோஸ் ஆகியவற்றில் வாட்ஸ் ஆப் சேவையை பெறுவதற்கான அனைத்து அம்சங்களும் இடம்பெற்றுள்ளன.
இதனால், விரைவில் வெளியாகும் வாட்ஸ் ஆப்பின் புதிய பதிப்பை தரவிறக்கம் செய்து ஜியோபோனிலும் வாட்ஸ் ஆப் பயன்படுத்த முடியும் நிலை ஏற்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here