பங்குச்சந்தையில் கடும் வீழ்ச்சி!

மும்பை:இந்திய பங்குச்சந்தைகள் இன்று கடும் சரிவை சந்தித்தன.
தேசிய பங்குச்சந்தையில் குறியீட்டு எண் நிப்டி 10ஆயிரம் புள்ளிகளுக்கும் கீழ் சரிந்தது.  மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 400 புள்ளிகளை இழந்தது.

சீனப்பொருட்கள் மீது அமெரிக்கா வரிவிதிப்பு, அமெரிக்கா ரிசர்வ் வங்கி பல ஆண்டுகளுக்கு பின்னர் கொண்டுவந்த வட்டிவிதிப்பு ஆகிய வெளிநாட்டு காரணிகள் பங்குச்சந்தை பாதிக்க காரணமாயின.இந்தியாவில் அரசியல் அசாதாரண நிலை நிலவுவதாக வெளியான தகவல்கள், ஜிஎஸ்டி வரியை பகிர்வதில் ஏற்பட்டுள்ள எதிர்ப்பு, தினமும் வெளியாகும் புதுப்புது வங்கிமோசடி விபரங்கள் சந்தையில் அசாதாரண சூழலை ஏற்படுத்தியுள்ளன.இன்றைய, வர்த்தக தினமுடிவில் நிப்டி 1.15சதவீதம் புள்ளிகள் குறைந்து 9ஆயிரத்து 998ல் முடிவடைந்தது. சென்செக்ஸ் 409.73 புள்ளிகள் இழந்து 32, 596.54ல் நிறைவடைந்தது.

வங்கி, ஆட்டோமொபைல், மூலதன பொருட்கள் ஆகிய துறைகளை சார்ந்த பங்குகள் கடும் சரிவு கண்டன. இருந்தபோதும், ஹெச்.சி.எல்.டெக், இன்ப்ராடெல், அதானி போர்ட்ஸ் நிறுவனங்கள் 2சதவீததுக்கும் மேல் விலை அதிகரித்தன.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here