பேரவையில் எலிகள் அழிப்பு! ஊழல் எலிகள் வளர்ப்பு!!

மும்பை: சட்டப்பேரவையில் கூட்டம் கூட்டமாக வசித்துவந்து எல்லோருக்கும் தொந்தரவு அளித்த 3 லட்சம் எலிகள் கொல்லப்பட்டுள்ளன.மகாராஷ்ட்ரா தலைமைச் செயலகம் மந்த்ராலாயாவில் எலித்தொல்லை அதிகரித்துவந்தது.
எலிகளை கொல்ல அரசு சார்பில் தனியார் நிறுவனத்துடன் ஒப்பந்தம் செய்தது.
அந்நிறுவனம் ஒரே வாரத்தில் சுமார் 3 லட்சத்து 20 ஆயிரம் எலிகளைக் கொன்றுள்ளது.

இதுகுறித்து சட்டசபையில் விளக்க அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது.
ஒரு வாரத்தில் எப்படி இவ்வளவு எலிகளைக் கொல்ல முடியும்,
மும்பை நகரில் 6 லட்சம் எலிகளை கொல்ல மாநகராட்சி இரண்டு ஆண்டுகள் ஆனது என்று முன்னாள் அமைச்சர் அறிக்கையின் மீது சந்தேகம் தெரிவித்தார்.

தனியாருக்கு எலிகளை ஒழிக்க செலவு செய்ததை விடவும் பத்து இருபது பூனைகளை வளர்த்திருந்தால் போதுமானது என்று ஒரு உறுப்பினர் தெரிவித்தார்.
பேரவையில் இருந்து எலிகளை அழித்துவிட்டனர். பேரவையை சுற்றிவரும் ஊழல் எலிகளை எப்போது அழிப்பீர்கள் என்று பத்திரிகையாளர்கள் கேள்வி எழுப்பியுள்ளார்கள்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here