அதிமுக அலுவலகத்தில் மாதவன்!

சென்னை:ஜெயலலிதாவின் சகோதரர் மகள் தீபாவின் கணவர் மாதவன் அதிமுக அலுவலகம் வந்தார். முதல்வர், துணைமுதல்வரை சந்தித்து வாழ்த்து தெரிவித்தார்.   எடப்பாடி பழனிசாமி தலைமையிலான தமிழக அரசு ஓராண்டு நிறைவு செய்துள்ளது.     அரசுசார்பில் இதற்காக விழா நடைபெற ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.ஜெயலலிதாவின் போயஸ் இல்லம் சட்டப்படி தீபாவுக்கும், அவரது சகோதரர் தீபக்குக்கும் தரப்படவேண்டும்.
தமிழக அரசு அதனை நாட்டுடைமையாக்க நடவடிக்கை எடுத்துள்ளது. ஜெயலலிதாவின் நினைவு இல்லம் அமைக்க பட்ஜெட்டில் நிதி ஒதுக்கியுள்ளது.
இந்நிலையில், தீபாவின் கணவர் அதிமுக அலுவலகம் வந்தார்.

அவரால் ஏதும் பிரச்சனை ஏற்படக்கூடும் என்பதால் அவரை காரிலேயே போலீசார் காத்திருக்க கூறினர்.
முதல்வர், துணைமுதல்வர் இருவரும் அவரை சந்திக்க ஒப்புதல் அளித்தபின்னரே அலுவலகத்துக்குள் அனுமதிக்கப்பட்டார். இருவருக்கும் வாழ்த்துக்கள் கூறி திரும்பினார் மாதவன்.

அரசியலில் தீபாவின் பாதை வேறு., தனது பாதை வேறு. தனது அமைப்பின் சார்பில் முதல்வர், துணைமுதல்வரை சந்தித்து வாழ்த்துக்கள் கூறினேன்.
அதிமுக-வுக்கு ஆதரவு தருவது குறித்து முடிவுசெய்யவில்லை. இவ்வாறு மாதவன் தெரிவித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here