சூப்பர் மார்க்கெட்டில் பயங்கரவாதி சுட்டுக்கொலை! பிரான்சில் பரபரப்பு சம்பவம்!!

பிரான்ஸ்: சூப்பர் மார்க்கெட்டில் புகுந்து 3பேரை கொன்ற பயங்கரவாதி சுட்டுக்கொல்லப்பட்டான்.
பிரான்சின் தெற்குப்பகுதியில் உள்ள நகரம் ட்ரெப். அங்குள்ள சூப்பர் யூ என்ற சூப்பர்மார்க்கெட் வழக்கம்போல் இயங்கிவந்தது.சுமார் 100வாடிக்கையாளர்கள் சூப்பர்மார்க்கெட்டில் இருந்தனர். அப்போது திடீரென்று துப்பாக்கியுடன் ஒரு பயங்கரவாதி புகுந்தான்.  அங்கிருந்தவர்கள் மீது துப்பாக்கியால் சுட்டுள்ளான்.

வெளியே தனது கூட்டாளிகள் முற்றுகையிட்டுள்ளனர். யாரும் தப்பிக்க முடியாது என்று மிரட்டிய அவன், ஐஎஸ் அமைப்பை சேர்ந்த பிரபல பயங்கரவாதி அப்தே சலாமை உடனடியாக விடுவிக்க வேண்டும் என்று நிபந்தனை விதித்தான்.

இதற்கிடையே சூப்பர்மார்க்கெட்டை சுற்றிலும் அதிரடிப்படையினர் முற்றுகையிட்டனர்.
அதிரடியாக உள்ளே புகுந்த போலீசார் பயங்கரவாதியை சுட்டுக்கொன்றனர். மக்கள் அனைவரையும் பத்திரமாக மீட்டனர்.
பயங்கரவாதி சுட்டதில் 3பேர் இறந்துள்ளதாக தெரியவந்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here