தலித் இளைஞருடன் காதல்! மகளை கொன்றார் தந்தை!!

திருவனந்தபுரம்: தலித் சமூகத்தைச் சேர்ந்த ராணுவ வீரரை காதலித்த பெண்ணை தந்தையே கொலை செய்துள்ளார்.
கேரளமாநிலம் மலப்புரம் அரிக்கோடு பகுதியைச் சேர்ந்தவர் ராஜன்.கூலித் தொழிலாளியான இவரது மகள் அதிரா தனியார் நிறுவனத்தில் கணக்கராக பணியாற்றினார்.
அஹிராவுக்கும், அரிக்கோட்டை சேர்ந்த ராணுவ வீரருக்கும் காதல் ஏற்பட்டது.
அந்த இளைஞர் தலித் சமூகத்தை சேர்ந்தவர் என்பதால் இருவர் குடும்பத்திலும் திருமணத்துக்கு சம்மதிக்கவில்லை.இதனால் இருவரும் வீட்டைவிட்டு வெளியேறி திருமணம் செய்துகொள்ள திட்டமிட்டனர். திருமணத்துக்கு முதல்நாள் தனது வருகையை காதலனுக்கு செல்போனில் தெரிவித்தார் அதிரா.அதனைக்கேட்டு அதிர்ச்சியடைந்தார் ராஜன். இருவருக்கும் இடையே வாக்குவாதம் எழுந்தது. ஆத்திரத்தில் மகளை கத்தியால் சரமாரியாக குத்திக்கொலை செய்தார் ராஜன்.  அவரை போலீசார் கைதுசெய்தனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here