ஆங்கிலத்தில் பேசியதால் ஆத்திரம்!! நண்பனை கொடூரமாக கொன்றவர் சரண்!!

மும்பை: ஆங்கிலத்தில் பேசியதால் கோபமுற்ற வாலிபர் கத்தியால் குத்தி நண்பரை கொலை செய்தார்.
மும்பையை சேர்ந்தவர் அமிர் அப்துல் வாகித் ரஹீம்(21).  இவரது நண்பர் முகமது அப்ரோஸ் ஆலிம் ஷேக்(20).

வாகித் ரஹீமை பார்க்கும் போதெல்லாம் ஆங்கிலத்தில் பேசி தனது புலமையை தம்பட்டம் அடித்துக்கொள்வது ஷேக்கின் வழக்கம்.
ஆங்கிலம் தெரியாத வாகித்ரஹீம் இதனால் மனஉளைச்சல் அடைந்துள்ளார்.

ஆலிம் ஷேக்கை மது அருந்த அழைத்து சென்றார் ரஹீம்.
போதையில் இருந்த ஆலிம் ஷேக் கழிவறை சென்றுள்ளார்.
பின்தொடர்ந்து சென்ற வாகித்ரஹீம், நண்பனின் கழுத்தை அறுத்தார்.

ஆத்திரம் தீர 54 தடவை சதக்சதக் என்று குத்திக்கொன்றுள்ளார்.  பின்னர் போலீசில் சரணடைந்துள்ளார்.
ஷேக்கின் உடலை கைப்பற்றிய போலீசார் வாகித் ரஹீமை கைது செய்தனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here