நெஞ்சுக்கு நிம்மதி தந்த தீர்ப்பு!

டெல்லி: டெல்லியில் ஆம் ஆத்மி கட்சியின் 20 எம்.எல்.ஏ.க்கள் தகுதிநீக்கம் செல்லாது என்று நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. முதல்வர் அரவிந்த் கேஜரிவாலின் நெஞ்சுக்கு நிம்மதி அளிக்கும் தீர்ப்பாக இது அமைந்துள்ளது.

டெல்லியில் ஆட்சிசெய்யும் ஆம் ஆத்மி கட்சியை சேர்ந்த 20 எம்.எல்.ஏ.க்களுக்கு அமைச்சரவை செயலர் பதவி வழங்கப்பட்டது. இது ஆதாயம்தரும் இரட்டைப்பதவி என்று குற்றம்சாட்டப்பட்டு அவர்கள் பதவியை பறிப்பதற்காக நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.அவ்வழக்கில் அமைச்சரவை செயலாளர் பதவி எம்.எல்.ஏ.க்களுக்கு வழங்கியது செல்லாது என்று அறிவிக்கப்பட்டது.
இதுதொடர்பாக தேர்தல் ஆணையத்தில் எதிர்க்கட்சிகள் புகார் செய்தன. தேர்தல் ஆணையம் 20எம்.எல்.ஏக்கள் பதவியை நீக்கி உத்தரவிட்டது. அதனை மத்திய அமைச்சரவை ஏற்றது.குடியரசுத்தலைவர் எம்.எல்.ஏக்கள் பதவி நீக்கம் செய்து உத்தரவிட்டார்.
இந்த உத்தரவை எதிர்த்து டெல்லி உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.
அவ்வழக்கில் இன்று தீர்ப்பு வழங்கப்பட்டது.

நீதிபதிகள் சஞ்சீவ் கண்ணா, சந்தர் சேகர் ஆகியோர் இன்று 76 பக்கங்களில் பரபரப்பு தீர்ப்பு அளித்தனர்.
ஆம் ஆத்மி கட்சி எம்எல்ஏக்கள் 20 பேரை தகுதிநீக்கம் செய்து தேர்தல் ஆணையம் பரிந்துரைக்கு குடியரசுத் தலைவரின் ஒப்புதல், மத்திய அரசின் அறிவிக்கை செல்லாது.
20 எம்எல்ஏக்கள் நீக்கம் என்ற தேர்தல் ஆணையத்தின் பரிந்துரை மோசமானதாகும்.
எம்எல்ஏக்கள் 20 பேருக்கும் வாய்மொழியாகக்கூட விளக்கம் அளிக்க வாய்ப்பு தரப்படவில்லை.

சட்டத்தை மோசமாகக் கையாண்டு, அதற்கு களங்கம் கற்பிக்கப்பட்டுள்ளது.
எம்.எல்.ஏ.க்கள் தகுதிநீக்கம் தொடர்பாக தேர்தல் ஆணையம் மறுபரிசீலனை செய்யவேண்டும்.
அதுதொடர்பான ஆய்வை முந்தைய தீர்ப்புகளின் எந்த பாதிப்பின்றியும் நடத்தவேண்டும்.  இவ்வாறு தீர்ப்பில் கூறப்பட்டுள்ளது.உண்மை வென்றுள்ளது. இது டெல்லி மக்களுக்கு கிடைத்த வெற்றி. டெல்லிமக்களுக்கு வாழ்த்துக்களை தெரிவிக்கிறேன் என்று முதல்வர் கேஜரிவால் தெரிவித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here