ஆடு திருடும் கும்பல் விரட்டிப்பிடிப்பு!

சேலம்:  ஓமலூர் அருகே ஆடுகள் திருடும் கும்பலை சினிமா பாணியில் பொதுமக்கள் விரட்டிபிடித்து போலீசில் ஒப்படைத்தனர்.
தொளசம்பட்டி அதை சுற்றியுள்ள கிராமங்களில்  தொடர்ந்து ஆடுகள் திருடப்படும் சம்பவங்கள் நடைபெற்று வந்தது.
வயல்வெளிகளில் மேய்ந்து கொண்டிருக்கும் ஆடுகளை காரில் வரும் மர்ம கும்பல் கடத்தி செல்வதாக அப்பகுதி மக்கள் கூறிவந்தனர்.
வழக்கம் போல அக்கும்பல் ஆடு திருடமுயன்றபோது காரில் தப்பிச் சென்றனர்  ஹரிஹரசுதன் என்பவரை பொதுமக்கள் விரட்டிப் பிடித்தனர்.  பின்னர்  அதே கும்பலை சேர்ந்த மணி என்பவரை போலீசார் கைதுசெய்துள்ளனர்.
இருவரிடமும் நடத்தப்பட்ட விசாரணையில் ஆடுகள் திருட்டு சம்பவங்களில் மேலும் 5 பேருக்கு தொடர்பு இருப்பது தெரியவந்துள்ளது. இதனையடுத்து அந்த 5 பேரையும் போலீசார் தேடிவருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here