Connect with us

International

பேஸ்புக் தகவல் திருட்டை சகித்துக்கொண்டிருக்க முடியாது!

Published

on

நியூயார்க்: தகவல் திருட்டை பேஸ்புக் நிறுவனமோ, நானோ சகித்துக்கொள்ள மாட்டோம் என்று தெரிவித்துள்ளார் பேஸ்புக் நிறுவனர் மார்க் ஜூகர்ஸ்பர்க்.

பேஸ்புக் பயன்படுத்தி வரும் 5கோடிபேரின் தகவல்களை லண்டனில் உள்ள கேம்ப்ரிட்ஜ் அனாலிடிகா நிறுவனம் திருடியதாக குற்றம்சாட்டப்பட்டது.
அமெரிக்க அதிபர் தேர்தலின்போது இத்தகவல்கள் அடிப்படையில் வாக்குறுதிகள், சலுகைத்திட்டங்கள் அறிவிக்கப்பட்டன.

இதனால் அதிபர் டிரம்ப் எளிதாக வெற்றிபெற முடிந்தது.  இதுதொடர்பான தகவல் வெளியானதும் பேஸ்புக் நிறுவனர் மார்க் தீவிர ஆலோசனை நடத்தினார்.
தகவல் திருட்டுகுறித்து அவர் கூறுகையில், தகவல் திருட்டை தடுக்கும் முயற்சியில் பேஸ்புக் ஏற்கனவே துவங்கிவிட்டது.

இருந்தபோதும் நாங்கள் செய்த சிறுதவறுகளை ஒப்புக்கொள்கிறோம்.
வருங்காலத்தில் தகவல் திருட்டை பேஸ்புக் சகிக்காது. கேம்ப்ரிட்ஜ் அனலடிகா நிறுவனத்தின் செயலிகளை தணிக்கை செய்து நடவடிக்கை எடுப்போம். என்றுதெரிவித்துள்ளார்.

Copyright © 2017 Zox News Theme. Theme by MVP Themes, powered by WordPress. Shared By Fancy Text Generator