எட்டு வங்கிகளிடம் ரூ.1,349கோடி ஏப்பம்! வெளிச்சத்துக்கு வந்தது புதுமோசடி!!

ஹைதராபாத்: எட்டு வங்கிகளிடம் ரூ.1,349கோடி மோசடி செய்ததாக ரியல் எஸ்டேட் நிறுவனத்தின் மீது சிபிஐ வழக்குப்பதிவு செய்துள்ளது.
ஹைதராபாத்தை சேர்ந்த டோடெம் இன்ப்ராஸ்டரக்சர் என்ற நிறுவனம் பண மோசடி செய்துள்ளது.

இந்நிறுவனம் அதிக அளவாக யூனியன் பேங்க் ஆப் இந்தியாவிடம் ரூ.303.84கோடி கடன்பெற்றுள்ளது.
இவ்வங்கியின் தலைமையில் அமைந்துள்ள பிற 7வங்கிகளும் சேர்ந்த கூட்டமைப்பு கடன் கொடுத்துள்ளது.
இந்நிறுவனம் வருமானவரி முறையாக செலுத்தவில்லை.
எனவே வரி ஏய்ப்பு செய்த நிறுவனங்களில் இந்தியாவில் 2வது இடத்தில் உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

2015ம் ஆண்டில் இந்நிறுவனத்தின் உரிமையாளர் சைலேஷ், அவர் மனைவி கவிதா தலைமறைவாகி உள்ளனர்.
அவர்கள் வெளிநாட்டுக்கு தப்பிச்செல்லாமல் இருக்க லுக் அவுட் நோட்டீசும் விடப்பட்டுள்ளது.

வங்கிகளில் பெற்ற கடன் தொகையை தங்கள் சொந்த கணக்குகளுக்கு மாற்றியும், பல்வேறு முன்னணி நிறுவனங்களில் துணை ஒப்பந்தங்கள் பெற்றதாக போலியான ஆவணங்கள் தயாரித்தும் டோடெம் இன்ப்ராஸ்ட்ரக்சர் நிர்வாகிகள் வங்கிகளை ஏமாற்றி உள்ளனர்.
வைர வியாபாரி நிரவ்மோடி, கீதாஞ்சலி ஜெம்ஸ், கனிஷ்க் ஜூவல்லர்ஸ் என்று வரிசையாக வங்கியில் நிதிமோசடி செய்த விபரம் வெளியாகி வருகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here